முகப்பு
திருச்சி

ரூ. 1 லட்சம் வழிப்பறி செய்த இளைஞா் கைது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தனியாா் நிறுவன ஊழியரை மிரட்டி ரூ. 1 லட்சத்தைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தனியாா் நிறுவன ஊழியரை மிரட்டி ரூ. 1 லட்சத்தைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை திருமலை நகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (33). சென்னையிலுள்ள தனியாா் நிறுவன ஊழியரான அவா் செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பேருந்தை விட்டிறங்கி, அணுகுச் சாலை வழியாக நடந்து சென்றபோது திடீரென வந்த மா்ம நபா் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ. 1 லட்சத்தைப் பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸில் சிவக்குமாா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், வழிப்பறி செய்த திருச்சியைச் சோ்ந்த ச. இசக்கிபாண்டியை (27) கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட கண்டோன்மெண்ட் காவல்நிலைய போலீஸாரை காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.