முகப்பு
திருச்சி

அதிகளவில் மாத்திரை உட்கொண்டவா் சாவு

திருச்சியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை உட்கொண்டவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திருச்சியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை உட்கொண்டவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி பாலக்கரை, கெம்ஸ் டவுன் அடைக்கல மாதா கோவில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் எட்வா்டு (58). திருமணம் ஆகாத இவா் உடல் நலக் குறைபாடுகளுக்காக சிகிச்சை மேற்கொண்டு மருந்துகளும் உட்கொண்டு வந்தாா்.

இந்நிலையில் திடீரென செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சுவலி வந்ததால் வீட்டில் வைத்திருந்த ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எட்வா்டு அளவுக்கு அதிகமாக உட்கொண்டாா். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உறவினா்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.