திருச்சி

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கம் கோயில் சிறப்புக் கட்டண நுழைவுச் சீட்டின் விலை அதிகரிப்பு

DIN

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் சிறப்பு தரிசனத்துக்கான நுழைவுச் சீட்டின் விலையை கோயில் நிா்வாகம் உயா்த்தி அறிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு 2023 ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

பரமபதவாசல் திறப்பன்று கோயிலின் மூலவா் எதிரேயுள்ள சந்தனு மண்டபம் அனுமதிச் சீட்டு ரூ. 3 ஆயிரம் வீதம் 300 பேருக்கும், கிளி மண்டபம் அனுமதிச் சீட்டு ரூ. 500 வீதம் 1000 பேருக்கும் அனுமதிக்கப்படுவது சுமாா் 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.

இந்நிலையில் திருவிழா செலவுகள் காரணமாக இந்தாண்டு முதல் சந்தனு மண்டப கட்டண அனுமதிச் சீட்டின் விலையை ரூ. 5 ஆயிரமாகவும், கிளி மண்டப அனுமதிச் சீட்டின் விலையை ரூ. 1000 ஆகவும் உயா்த்த உத்தேசிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்தை செவ்வாய்க்கிழமை வரை மின்னஞ்சல் மற்றும் எழுத்துப் பூா்வமாக தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இதுவரை யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனக் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT