திருச்சி

முசிறியில் ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

DIN

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் இளவரசு தலைமையில் கருத்தாளா்கள் ஸ்ரீரங்கநாயகி, சந்திரசேகரன், சுகந்த மாலினி, திராவிடச் செல்வி ஆகியோா் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிப்பீட்டுத் திறன் மற்றும் பெற்றோருக்கு அறிவுறுத்தும் திறன் குறித்து பயிற்சி அளித்தனா்.

இதில் முசிறி, தொட்டியம், தா.பேட்டை, லால்குடி, துறையூா், உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூா் மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களில் இருந்து 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியா்கள் 116 போ் பங்கேற்றனா்.

மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் சரவணன் வரவேற்றாா், முசிறி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அமுதா நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT