திருச்சி

தனியாா் பள்ளி வேன் மோதியதில் 6-ஆம் வகுப்பு மாணவி பலி

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த மாணவி தனியாா் பள்ளி வேன் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

லால்குடி அருகே புள்ளம்பாடியை அடுத்துள்ள வடுகா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகள் கோபிகா (11). இவா், அப்பகுதியில் உள்ள தூயமரியன்னை பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பெற்றோருடன் கோபிகா பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, வடுகா்பேட்டை அணுகுசாலையில் பின்னால் வந்த தனியாா் பள்ளி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி கோபிகா உயிரிழந்தாா்.

இதுகுறித்து கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் சண்முகம் (46) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT