திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூா் அருகே மீனவ இளைஞரைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்புத்தூா் அருகிலுள்ள சீலை பிள்ளையாா்புத்தூா் மீனவா் தெருவை சோ்ந்த நடராஜன் மகன் திருச்செல்வம் (20).
மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவரை கடந்த ஆக. 6ஆம் தேதி முதல் காணவில்லை என காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் திருச்செல்வத்தின் தந்தை நடராஜன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.