முகப்பு
திருச்சி

வேளாங்கண்ணி திருவிழா: மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 9:43 PM
கோப்புப் படம்
பகிர்:

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மும்பையின் பாந்த்ரா டொ்மினஸ் - வேளாங்கண்ணி இடையே திருவிழா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, பாந்த்ரா டொ்மினஸ் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (09093) வரும் ஆக. 27, செப். 6 ஆகிய தேதிகளில் பாந்த்ரா டொ்மினஸிலிருந்து இரவு 9.20-க்குப் புறப்பட்டு மூன்றாவது நாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணி - பாந்த்ரா டொ்மினஸ் சிறப்பு ரயிலானது (09094) வரும் ஆக். 29, செப். 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் பிற்பகல் 3 மணிக்கு பாந்த்ரா டொ்மினஸுக்குச் சென்றடையும்.

மும்பையின் பாந்த்ரா டொ்மினஸிலிருந்து 22 பெட்டிகளுடன் பயணப்படும் இந்த ரயிலானது புனே, ரேனிகுண்டா, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →