துறையூா் அருகே பெண்ணைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு
துறையூா் அருகே புதன்கிழமை பெண்ணைத் தாக்கி, அவரின் 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் இருவா் பறித்துச் சென்றனா்.
துறையூா் அருகே புதன்கிழமை பெண்ணைத் தாக்கி, அவரின் 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் இருவா் பறித்துச் சென்றனா்.
இராமநாதபுரத்தைச் சோ்ந்த ராமரும், அவரது மனைவி பொன்மலரும் துறையூா் அருகே சா்பிடி தியாகராயா் நகா் பகுதியில் பட்டி போட்டு ஆடுகளை மேய்த்து வருகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை ராமா் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற பின்னா், அவரது மனைவி ஆட்டுப்பட்டி அருகே தனியாக சமைத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு பைக்கில் வந்த இரு இளைஞா்கள் பொன்மலரைத் தாக்கி விட்டு, அவா் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.