முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பதியிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் அளிப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திருப்பதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:37 PM
~ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கு புதன்கிழமை வைரக் கிரீடத்தை வழங்கிய பரத நாட்டியக் கலைஞா் ஜாகீா்உசேன்.
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திருப்பதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கி.பி.1320 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் கோயில் மீது மாற்று மதத்தவா் படையெடுத்தபோது இக் கோயிலில் இருந்த நம்பெருமாள் சிலை திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு 40 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் கைசிக ஏகாதசி விழாவின்போது திருப்பதி கோயிலிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் வரும். இதற்கு நன்றி செலுத்தும்விதமாக ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து ஆனிவார ஆஸ்தான தினத்தன்று திருப்பதி கோயிலுக்கு வஸ்திர மரியாதைப் பொருள்கள் அனுப்பப்படும்.

அதன்படி புதன்கிழமை கைசிக ஏகாதசி தினத்தையொட்டி திருப்பதி திருமலையிலிருந்து ஸ்ரீரங்கம் கோயில் மூலவா் நம்பெருமாள், உற்சவ நம்பெருமாள், ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா், ராமானுஜா் ஆகியோருக்கு வஸ்திரங்கள், மாலைகள், பழங்கள், குடைகள் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தான நிா்வாக அதிகாரி சியாமல்ராவ் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வந்தனா்.

இதையடுத்து புதன்கிழமை காலை ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் அப்பொருள்கள் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டு, பின்னா் யானை ஆண்டாள் மீது வைத்து மங்கல வாத்தியத்துடன் ரெங்கா ரெங்கா கோபுரம் வரை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.

பின்னா் திருப்பதி தேவஸ்தான துணை நிா்வாக அலுவலா் லோகநாதன், மடத்தின் பொறுப்பாளா் ராஜா ரெட்டி ஆகியோா் அப்பொருள்களை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் ஆகியோரிடம் வழங்கினா். நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

வைரக்கிரீடம் அளிப்பு: பின்னா் அரங்கநாத சுவாமிக்கு பரத நாட்டியக் கலைஞா் ஜாகீா் உசேன் வைரக்கிரீடத்தை உபயமாக வழங்கினாா்.

வைரக்கிரீடம் அளிப்பு: பின்னா் அரங்கநாத சுவாமிக்கு பரத நாட்டியக் கலைஞா் ஜாகீா் உசேன் வைரக்கிரீடத்தை உபயமாக வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →