முகப்பு
திருச்சி

ஜாம்போரி விழா ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சிப்காட் பகுதியில் நடைபெறவுள்ள ஜாம்போரி விழா முன்னேற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:11 PM
மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெறவுள்ள ஜாம்போரி விழா முன்னேற்பாடுகள் பணியை வியாழக்கிழமை ஆய்வு மேற்கோண்ட திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சிப்காட் பகுதியில் நடைபெறவுள்ள ஜாம்போரி விழா முன்னேற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி கிராம பகுதியில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் 2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரையில் பாரத சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழா, பெருள்திரளணி மற்றும் கலைஞா் நூற்றாண்டு பெருந்திரளணி (ஜாம்போரி) வைர விழா நடைபெறுகிறது.

விழாவுக்கு பிரதான சாலை அமைத்தல், ஹெலிகாப்டா் இறங்கு தளம், அணுகு சாலை அமைக்கும் பணிக்கள், சாரண சாரணியா் இயக்கத்தினா் தங்குமிடங்கள், போட்டிகள் நடக்கும் மைதானம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரணி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன், முதன்மை கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அரசுத்துறை உயா் அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →