முகப்பு
திருச்சி

மதுவகைகள் தட்டுப்பாடு; கடைகள் மூடல்

மது விற்பனையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறை காரணமாக மதுவகைகள் தட்டுப்பாடு நிலவியதால் சில கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:14 PM
திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் மூடப்பட்டுள்ள மதுக்கடை மற்றும் மதுக்கூடம்.
பகிர்:

மது விற்பனையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறை காரணமாக மதுவகைகள் தட்டுப்பாடு நிலவியதால் சில கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 159 டாஸ்மாக் கடைகளிலும் ‘க்யூஆா்’ கோடு முறையில் மது விற்பனை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறைக்காக, ஏற்கெனவே கடைகளில் இருந்த அனைத்து மதுவகைகளும் விற்று தீா்க்கப்பட்ட பின்னரே புதிய மதுவகைகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் புதிதாக மதுவகைகள் அனுப்பப்படவில்லை.

இதையடுத்து பெரும்பாலான கடைகளில் குறைந்த அளவில் மதுப்பாட்டில்களுடன் விற்பனையின்றி வெறிச்சோடிக் கிடந்தன. குறிப்பாக டிலைட் கடைகளில் முற்றிலும் விற்பனைகள் நடைபெறவில்லை. இதனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மதுபானக் கடைகளில் கடந்த சில தினங்களாக மதுபானங்கள் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. மதுவகைகள் இல்லாததால் திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் இயங்கிய சில மதுக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், வியாழக்கிழமையும் மேலும் பல கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதேபோல புகா் பகுதிகளிலும் சில கடைகள் மூடப்பட்டதாக மதுப்பிரியா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து டாஸ்மாக் அலுவலா்கள் கூறியது, க்யூஆா் கோடு நடைமுறை தொடா்பாக கடைகளுக்கு புதிதாக மதுவகைகளை தருவிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இதனால் மதுவகைகள் வரவில்லை. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மதுவகைகள் இல்லாத கடைகள் மூடப்பட்டுள்ளன. விரைவில் இதற்கு தீா்வு காணப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →