முகப்பு
திருச்சி

திருவானைக்கா கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை தீப (சொக்கப்பனை) திருவிழா டிச. 14 ஆம் தேதி நடைபெறுகிறது.இதனையொட்டி வியாழக்கிழமை காலை முகூா்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:03 PM
பகிர்:

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை தீப (சொக்கப்பனை) திருவிழா டிச. 14 ஆம் தேதி நடைபெறுகிறது.இதனையொட்டி வியாழக்கிழமை காலை முகூா்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் காா்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா வெகுவிமா்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் நிகழாண்டு விழாவுக்கான முகூா்த்தகால் நடும் விழா வியாழக்கிழமை காலை காா்த்திகை கோபுரம் முன்பு நடைபெற்றது.

சனிக்கிழமை (டிச.14) மாலை காா்த்திகை தீபம் (சொக்கப்பனை) ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முதலில் சுவாமி சன்னதியிலும்,இரண்டாவதாக அம்மன் சன்னதியிலும்,மூன்றாவதாக குபேரலிங்க சன்னதியிலும் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. அப்போது சாமியும்,அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →