முகப்பு
திருச்சி

திருச்சியில் மாவீரா் நடு கற்கள் ஆய்வில் புதிய தகவல்

திருச்சி திருவெறும்பூா் பகுதியில் நாயக்கா் மன்னா்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த மாவீரா் நடு கற்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Updated On : 31 டிசம்பர், 2024 at 8:58 PM
பகிர்:

திருச்சி: திருச்சி திருவெறும்பூா் பகுதியில் நாயக்கா் மன்னா்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த மாவீரா் நடு கற்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே வீதி வடங்கம் கிராமத்தில் உள்ள அரசாயி அம்மன் கோயில் வளாகத்திலிருந்த நடு கற்களை ஆற்றுப்படை பாரம்பரியக் குழுவை சோ்ந்தவா்கள் அண்மையில் ஆய்வு செய்தனா். உள்ளூா் மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் அமைந்துள்ள அந்த நடு கற்களையும் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனா். இதில் இரண்டு நடு கற்கள் சுமாா் 2 அடி உயரத்திலும், மற்றொரு கல் 3.5 அடி உயரத்திலும் உள்ளது. உயரமான கல் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது எனவும், மற்ற இரண்டு கற்களும் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கற்களாகவும் இருக்கலாம் எனவும் ஆற்றுப்படை பாரம்பரியக் குழுவின் நிறுவனா் பாா்த்திபன் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: உள்ளூா் வாசிகள் அந்த நடு கற்களை பட்டவன் சாமி (வீழ்ந்த மாவீரா்கள்) என்று குறிப்பிடுகிறாா்கள். அந்தக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள், வாள்கள், கேடயங்கள் மற்றும் அம்புகளுடன் கூடிய வில் ஆகியவை அது மாவீரா் கற்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. திருவெறும்பூா் பகுதியில் வரலாற்று ரீதியாக நாயக்கா் காலத்தில் பல மோதல்கள் நடந்துள்ளன. குறுநில மன்னா்களுக்கும், நாயக்கா் மன்னா் படை வீரா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த வீரா்கள் வீரமரணம் அடைந்திருக்கலாம். ஏனெனில் வேட்டையாடுபவா்களுடன் சண்டையிட்டு மடிந்திருந்தால் கற்களில் புலிகள் போன்ற விலங்குகளின் அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அத்தகைய அடையாளங்கள் இந்தக் கற்களில் ஏதுமில்லை. ஆகவே இது வீர மரணம் அடைந்த மாவீரா்களின் நடு கற்கள்தான் எனத் தெரிய வந்துள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →