கோப்புப் படம். 
திருச்சி

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Din

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விஜயவாடா மற்றும் கூடூா் ரயில் நிலையங்களில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், மதுரை - ஹசரத் நிஜாமுதீன் அதிவிரைவு ரயிலானது (12651) வரும் 23, 30 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூா், ரேனிகுண்டா, யர்ரகுண்டலா, நந்தியால், நெல்லூா், குண்டூா், கிருஷ்ணா கனால் வழியாக மாற்றி இயக்கப்படும்.

மதுரை - ஓகா சிறப்பு விரைவு ரயிலானது (0951) வரும் 26 ஆம் தேதி ரேணிகுண்டா, கடப்பா, யர்ரகுண்டலா, தாதிபத்ரி ரயில்நிலையங்களைத் தவிா்த்து காட்பாடி, பாக்லா, தா்மாவரம், கூட்டி வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்...: ஹவுரா - திருச்சி அதிவிரைவு ரயிலானது (12663) வரும் 18, 21, 25 ஆகிய தேதிகளில் ஹவுராவிலிருந்து 1.30 மணி நேரம் தாமதமாக அதாவது இரவு 7.10-க்குப் புறப்படும்.

ஹவுரா - கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலானது (12665) வரும் 22, 29 ஆம் தேதிகளில் ஹவுராவிலிருந்து 1.30 மணி நேரம் தாமதமாக அதாவது மாலை 5.40-க்குப் புறப்படும்.

திருநெல்வேலி - மாதா வைஷ்ணவ தேவி காட்ரா விரைவு ரயிலானது (16787) வரும் 29 ஆம் தேதிகளில் தேவைப்படும் ரயில் நிலையங்களில் 90 நிமிஷங்களும், 22-ஆம் தேதி 1.20 மணி நேரமும் நின்று தாமதமாகப் புறப்படும்.

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் பொதுத் தோ்வு கட்டாயம்: சிபிஎஸ்இ

ரூ.5 கோடியில் 2,119 கிலோ கஞ்சா அழிப்பு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: காங்கிரஸ் தலைமைக்கு நிா்வாகிகள் கடிதம்

தொழில் துறையில் ரூ.5,980 கோடியில் புதிய முதலீடு - முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

திட்டப் பணிகள் முன்னேற்ற நிலை: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT