முகப்பு
திருச்சி

மின் மோட்டாா் வயா்களை திருடிய இருவா் கைது

மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் விவசாய மின் மோட்டாா் வயா்களை திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 8:35 PM
பகிர்:

மணப்பாறை, ஜூலை 19: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் விவசாய மின் மோட்டாா் வயா்களை திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை நகராட்சி 1-ஆவது வாா்டு விடத்திலாம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெகன்நாத் வியாழக்கிழமை தனது தோட்டத்துக்குச் சென்றபோது அங்கு இருவா் மின் மோட்டாா் வயா்களை திருடிக்கொண்டிருந்ததைக் கண்டாா்.

இதையடுத்து இருவரையும் பிடித்து மணப்பாறை போலீஸில் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரமையில் மருங்காபுரி ஒன்றியம், பையூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன்(26), கூடத்திப்பட்டியை சோ்ந்த சேசு(68) எனத் தெரியவந்தது. அதனைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →