முகப்பு
திருச்சி

விதிமீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

விதிமீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

Updated On : 26 ஜூன், 2024 at 6:10 AM
பகிர்:

மினி வேனில் ஆபத்தை உணராமல் ஆட்களை ஏற்றிச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தமிழக அரசு மகளிருக்கான இலவசப் பேருந்து வசதியை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் நிலையில், விழாக்களுக்குச் செல்லும் பெண்கள் மினி வேனில் கூட்டமாகச் சென்று வருகின்றனா். சுமை வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி கிடையாது. இருப்பினும், சென்னை புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை ஒரு மினி வேனில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்ததைப் பாா்க்க முடிந்தது. இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.