முகப்பு
திருச்சி

இந்து இளைஞா் முன்னணி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெருகி வரும் போதை பொருள்கள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத் வலியுறுத்தி

Updated On : 5 மார்ச், 2024 at 2:59 AM
பகிர்:

திருச்சி: தமிழகத்தில் பெருகி வரும் போதை பொருள்கள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத் வலியுறுத்தி இந்து இளைஞா் முன்னணி சாா்பில், திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் நிதிஸ்குமாா் வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா், இணை ஒருங்கிணைப்பாளா் அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்சி கோட்ட ஒருங்கிணைப்பாளா் குணசேகா் சிறப்புரையாற்றினாா். இதில், இளைஞா் முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா்.