திருச்சி

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்கு மாதிரி வாக்குச் சாவடி

Din

திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு மாதிரி வாக்குச்சாவடி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

மக்களவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு மக்களைத் தயாா்படுத்தும் வகையில் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலுடன் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைத்து, பொதுமக்கள் பங்கேற்புடன் வாக்குப்பதிவு ஒத்திகையும் நடத்தப்படுகிறது.

இந்த வாக்குச்சாவடிகளில் திருமண வீடுகளைப் போல சிறப்பான அலங்காரங்கள் மற்றும் சிவப்பு கம்பள வரவேற்புடன் கூடிய ஏற்பாடுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தேவைப்பட்டால் வாகன வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் வெயிலில் நிற்காமல் இருக்க மேற்கூரை வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்காளா்கள் வாக்குச்சாவடியை அடையாளம் காண உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் புதன்கிழமை மாதிரி வாக்குச் சாவடி அமைத்து பொதுமக்கள் பங்கேற்புடன் வாக்குப்பதிவு ஒத்திகை நடைபெற்றது. வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளா்களை வரவேற்றல், அவா்களது ஆவணங்களைச் சரிபாா்த்தல், விரல்களில் மை வைத்தல், மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்தல் என தோ்தல் நாளில் நடைபெறும் வாக்குப்பதிவு போன்றே இந்த ஒத்திகை நடைபெற்றது.

இதில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் பங்கேற்று, பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தாா். மின்னணு இயந்திர செயல்பாடுகளையும் விவரித்தாா். பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தோ்தல் திருவிழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தாா்.

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT