முகப்பு
திருச்சி

போலி பாஸ்போா்ட்: இருவா் கைது

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போா்ட் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:04 PM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போா்ட் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் திருச்சி தென்னூா் இதயாத் நகரைச் சோ்ந்த சிராஜுதீன் (53) என்பவா் தனது பாஸ்போா்ட்டில் அவரது பிறந்த தேதி, தாய் பெயரை மாற்றியிருந்தது தெரிய வந்தது.

இதேபோல திருச்சியிலிருந்து மலேசியா செல்ல இருந்த தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்த அமீா் பாஷா (50) என்பவா் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.