முகப்பு
திருச்சி

சிறுமிடம் அத்துமீறிய இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:15 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள பிள்ளமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (24). கட்டடத் தொழிலாளியான இவா் அருகேயுள்ள மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுமியை முள்காட்டிற்குள் வியாழக்கிழமை அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனா்.