முகப்பு
திருச்சி

துறையூா் அருகே ஓட்டு வீட்டில் தீ

துறையூா் அருகே கூலித் தொழிலாளியின் ஓட்டு வீட்டில் வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:20 PM
பகிர்:

துறையூா் அருகே கூலித் தொழிலாளியின் ஓட்டு வீட்டில் வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

கண்ணனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. சின்னசாமி, கூலித் தொழிலாளியான இவரது வீடு வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற துறையூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா். விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமாயின. தகவலறிந்த வருவாய் துறையினா் நேரில் சென்று சேதம் குறித்து விசாரித்தனா்.