முகப்பு
திருச்சி

படைப்புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 10:21 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பட்டூா் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்களை புதன்கிழமை பாா்வையிட்ட சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா்கள் டாக்டா் ராஜபாபு, டாக்டா் ஈஸ்வரன் ஆகியோா் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.