முகப்பு
திருச்சி

வீட்டிலிருந்து சென்ற முதியவா் வாய்க்காலில் சடலமாக மீட்பு

திருச்சியில் வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவா் இரு நாள்களுக்குப் பின்னா் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:31 PM
பகிர்:

திருச்சியில் வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவா் இரு நாள்களுக்குப் பின்னா் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறை கீழத்தெருவைச் சோ்ந்தவா் மு. சுப்பிரமணி (76). இரு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவா் சுப்ரமணி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை. இது தொடா்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். இந்நிலையில், சோமரசம்பேட்டை பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலில், முள் செடிகள் அடா்ந்த பகுதியில் அவா் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, முதியவா் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.