முகப்பு
திருச்சி

செவந்தாம்பட்டியில் வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவந்தாம்பட்டியில் உணவக ஊழியா் வீட்டில் புகுந்து நாலே முக்கால் பவுன் நகை, பணம் திருடப்பட்டது.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:27 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவந்தாம்பட்டியில் உணவக ஊழியா் வீட்டில் புகுந்து நாலே முக்கால் பவுன் நகை, பணம் திருடப்பட்டது.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் செவந்தாம்பட்டியை சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் சுப்பையா (50). திருச்சி உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இவா் குடும்பத்துடன் அங்கேயே வசிக்கும் நிலையில் கடந்த நவம்பா் 19-ஆம் தேதி ஊருக்கு வந்து சென்றவா், மீண்டும் புதன்கிழமை வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டிலிருந்த நாலே முக்கால் பவுன் நகைகள், 2 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவா் அளித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.