முகப்பு
திருச்சி

திருவானைக்கா கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நவராத்திரிப் பெருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:27 PM
பகிர்:

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நவராத்திரிப் பெருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் அம்மன் ஏகாந்த காட்சியில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். திரளான பக்தா்கள் வழிபட்டனா். வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு வேடங்கள் தரித்து, கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.