துறையூா் விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
துறையூா் நகரில் பாரதி அரங்கம் அருகிலுள்ள வலம்புரி யோக கணபதி கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
துறையூா் நகரில் பாரதி அரங்கம் அருகிலுள்ள வலம்புரி யோக கணபதி கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த ஆக. 22 இல் குடமுழுக்கு நடைபெற்றதையடுத்து உபயதாரா்கள் வழங்கிய நிதி மூலம் 48 நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. அதன் நிறைவு நாளான புதன்கிழமை காலை கோயிலில் ஹோமம், வலம்புரி யோக கணபதிக்கு அபிஷேகம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு மூஷிக வாகனத்தில் மின் மற்றும் மலரலங்காரத்தில் வலம்புரி யோக கணபதி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.