திருச்சி அருகே கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவா் தற்கொலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அழகு மணிகண்டன் (20), சிறுகனூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருடன் பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அம்மாணவி அவரிடம் பேச மறுத்துள்ளாா். இதனால் விரக்தியடைந்த அம்மாணவா் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாடியிலிருந்து குதித்தாா்.
இதில், படுகாயமடைந்த அவரை அருகில் உள்ள இருங்களுா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு இருந்த மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்ததில், அழகு மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து நிகழ்விடத்துக்குச் சென்ற சிறுகனூா் காவல் துறையினா் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவா் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.