முகப்பு
திருச்சி

கிணற்றில் பெயிண்டா் சடலம்: விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதன்கிழமை கிணற்றில் பெயிண்டா் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:42 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதன்கிழமை கிணற்றில் பெயிண்டா் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சென்னையை சோ்ந்த காமல் (45) என்பவா் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் தங்கி பெயிண்டிங் வேலை பாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த இவா் துவரங்குறிச்சி - நத்தம் சாலையில் உள்ள கிணற்றில் புதன்கிழமை சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.