தவெக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு
தவெக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு...
திருச்சியில் அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இக்கட்சியின் மாநாடு தொடா்பாக திருச்சி பாலக்கரை பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாலக்கரை பகுதிச் செயலாளா் சிவக்குமாா், கோரிமேடு பகுதியைச் சோ்ந்த ரோபோ வேலு உள்ளிட்டோா் மீது பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.