சமயபுரம் சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை
சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் வியாழக்கிழமை கூறுகையில், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.31 ஆம் தேதி 42 வயது ஆண் நோயாளிக்கு சிறுநீரக மாற்றுச் அறுவை சிகிச்சை முதல் முறையாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல செப்.9 ஆம் தேதி 38 வயதுள்ள ஒருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது என்றாா்.
இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவா்கள் அப்பன் பிரகாஷ், பிரபு ஆனந்த், சுரேஷ் பாலாஜி, ஆனந்த் யுவராஜ், விமல் ஆகியோரை பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பாராட்டினாா்.
நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.கே. ரஞ்சன், பதிவாளா் டாக்டா் தனசேகரன் தேவராஜ், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புல முதல்வா் துளசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.