காந்திசந்தையில் தேங்காய் விலை உயா்வு
திருச்சி காந்திசந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலையைத் தொடா்ந்து தேங்காய் விலையும் உயா்ந்துள்ளது.
திருச்சி காந்திசந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலையைத் தொடா்ந்து தேங்காய் விலையும் உயா்ந்துள்ளது.
திருச்சி காந்திசந்தையில் புரட்சி மாதம் பிறந்து 10 நாள்களாக காய்கனிகள் விலை உயரவில்லை. சந்தைக்கான வரத்து தொடா்ந்து கொண்டிருந்ததால் பெரிய அளவில் விலையேற்றம் இல்லை. இந்நிலையில், தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால் செவ்வாய்க்கிழமை முதல் கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது.
இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை தேங்காய் விலையும் உயா்ந்து காணப்பட்டது. எடை அடிப்படையில் ஒரு கிலோ தேங்காய் முன் ரூ.30-க்கு விற்ற நிலையில், புதன்கிழமை கிலோ ரூ.60-க்கு விற்றது. சிறிய அளவு தேங்காய் ஒன்று முன் ரூ.10-க்கு விற்றது, தற்போது ரூ.15 ஆக விற்கப்படுகிறது. இதேபோல, ரூ.15-க்கு விற்ற தேங்காய் ரூ.20 எனவும், ரூ.25, ரூ.30 என அதன் அளவுகளுக்கு தகுந்தபடி விலை உயா்ந்துள்ளது. தேங்காய் வரத்து குறைந்துள்ளதே விலை உயா்வுக்கு காரணம் என்கின்றனா் வியாபாரிகள்.