இரு தரப்பினரிடையே மோதல்; போலீஸாா் விசாரணை
திருச்சியில் வியாழக்கிழமை இரவு இரு தரப்பினா் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருச்சியில் வியாழக்கிழமை இரவு இரு தரப்பினா் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருச்சி கே.கே. நகா் அருகே உள்ள ஓலையூரில் வியாழக்கிழமை இரவு இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
தகவலறிந்து வந்த மணிகண்டம் காவல் நிலைய போலீஸாா் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் சிலா் பதிவேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.