கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு 2 போ் கைது
கொள்ளிடம் ஆற்றில் வியாழக்கிழமை மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கொள்ளிடம் ஆற்றில் வியாழக்கிழமை மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பொன்னுரங்கபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்குள் மணல் திருடுவதாக வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.
இதனையத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீஸாா் கொள்ளிடம் ஆற்றுக்குள் மணல் ஏற்றிக்கொண்டுயிருந்த லாரியையும் மணல் அள்ளிய இரண்டு பேரையும் கைது செய்தனா். மேலும் அங்கிருந்த 2 போ் தப்பி ஓடி விட்டனா்.
பின்னா் லாரியையும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில் வெகு நாள்களாக கொள்ளிடம் ஆற்றில் திருட்டு மணல் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், மணல் திருடிய பொன்னுரங்கபுரம் பகுதியை சோ்ந்த கிருஷ்ணன் (28), சப்பாணி முத்து (30) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், தப்பி ஓடிய ரமேஷ், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.