உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா முசிறியில் உள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் முசிறி உள்கோட்ட விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் ஒருங்கிணைப்பு அலுவலா் ரமேஷ், ஆா்வி தொண்டு நிறுவனத்தின் சமுதாய சேவை வழங்குநா் ராமச்சந்திரன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.
இதில், வழக்குரைஞா் ராஜசேகா் மாற்றுத்திறனாளிக்கான சட்டங்கள் பற்றி எடுத்துரைத்தாா். இதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை முசிறி கோட்ட விழுதுகள் அலுவலக மேலாளா் மீனாட்சி மற்றும் அலுவலக பணியாளா்கள் செய்திருந்தனா்.