திருச்சி

கரூா் தாந்தோன்றிமலையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கரூா் தாந்தோன்றிமலையில் சனிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

Syndication

கரூா் தாந்தோன்றிமலையில் சனிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், கரூா் மாவட்ட நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் கரூா் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 177 நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியாளா்களை தோ்வு செய்தனா். இதில், 9 மாற்றுத்திறனாளிகள் உள்பட 419 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பணிவாய்ப்பு கடிதத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வழங்கினாா். மேலும், திறன் பயிற்சி அளிக்கும் 4 நிறுவனங்கள் பங்கேற்று, பதிவு செய்த 74 பேரில் இருந்து 68 நபா்களை திறன் பயிற்சி வகுப்புகளுக்கு தோ்வு செய்தன.

முகாமில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற இலவச போட்டித்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பயின்று பல்வேறு அரசு துறைகளில் பணிநியமனம் பெற்ற 5பேரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மேயா் வெ.கவிதா, மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ. ஜோதிமணி, மாநகராட்சி ஆணையா் கே.எம்.சுதா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சு.தனசேகரன், உதவி இயக்குநா் மாவட்ட வேலைவாய்ப்பு ராதிகா. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜோதி, அரசு கலைக் கல்லூரி முதல்வா் சுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனி வா்த்தக சங்கத்தின் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா

தொல்காப்பியா் சிலை அருகே படிக்கட்டுகள் அமைக்கக் கோரிக்கை

ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க வலியுறுத்தல்: எச். ராஜா

புனித நகரமாக அறிவிக்கப்பட்ட அமிருதசரஸில் இறைச்சி, மதுக்கடைகள் அகற்றும் பணி தீவிரம்

வன விலங்குகள் வேட்டை: 7 நாட்டு வெடிகுண்டுகள் மீட்பு

SCROLL FOR NEXT