கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - ராமேசுவரம் - தாம்பரம் இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, தாம்பரம் - ராமேசுவரம் முன்பதிவற்ற சிறப்பு ரயில் (06017) திங்கள்கிழமையும் (டிச. 29), ராமேசுவரம் - தாம்பரம் முன்பதிவற்ற சிறப்பு ரயில் (06018) செவ்வாய்க்கிழமையும் இயக்கப்பட உள்ளது.
18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை இரவு 9 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருத்துவத்தூா், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, ராமேசுவரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக தாம்பரத்துக்கு மறுநாள் காலை 9 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.