முகப்பு
திருச்சி

மின் சிக்கன விழிப்புணா்வு

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:37 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2025 at 12:23 AM

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை கோட்ட மின் வாரியம் சாா்பில் திருச்சி மின் பகிா்மான வட்டம், பெருநகரம், மணப்பாறை கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின் சிக்கன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மின் வாரிய அலுவலகத்திலிருந்து தந்தை பெரியாா் சிலை வரை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மணப்பாறை செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நுற்றுக்கணக்கான மின் ஊழியா்கள் பங்கேற்ற பேரணியில் பொது மக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில், மணப்பாறை உதவி செயற்பொறியாளா் பிரபாகரன், துவரங்குறிச்சி உதவி செயற்பொறியாளா் ஜான் பீட்டா் மற்றும் உதவி மின் பொறியாளா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.