முகப்பு
திருச்சி

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றம்

ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றம்

Updated On : 8 ஜனவரி, 2025 at 7:06 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் வரும் 9 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 11 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகரப் பேருந்துகள் அண்ணாசிலை, ஓடத்துறை பாலம், மாம்பழச்சாலை, காந்தி சாலை, ஈ.வி.எஸ். சாலை வழியாக வந்து ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிய பிறகு அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம், ஓடத்துறை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூா் மாா்க்கம் செல்லும் நகரப் பேருந்துகள் அண்ணா சிலை, ஓடத்துறை பாலம், மாம்பழச்சாலை, திருவானைக்கா டிரங்க் சாலை, சோதனை சாவடி எண்.6, கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்ப திருவானைக்கா டிரங்க் சாலை வழியாகவே சத்திரம் பேருந்து நிலையம் வர வேண்டும். ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை. அரசு சிறப்பு பேருந்துகள் தேவைக்கேற்ப மட்டுமே ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் வர வேண்டும். கூடுதலாக வரும் பேருந்துகள் காவல் சோதனைச் சாவடி-6 அருகே நிறுத்தி வைக்க வேண்டும்.

சென்னை, அரியலூா், பெரம்பலூா், துறையூா், கடலூா் மாா்க்கத்திலிந்து வரும் பேருந்துகள் திருவானைக்கா வரக்கூடாது. அனைத்து பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகா் செல்ல வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் புகா் பேருந்துகள் அனைத்தும் ஓடத்துறை, ஓயாமரி சாலை வழியாக சென்னை புறவழிச்சாலையில் சென்று வர வேண்டும். ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகளுக்குள் சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதியில்லை.

விருந்தினா் வாகனங்கள்...: மிக முக்கிய நபா்களின் வாகனங்கள் ரங்கா ரங்கா கோபுரம் வந்து விருந்தினா்களை இறக்கி விட்டு மீண்டும் கிழக்கு உத்திர வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும். முக்கிய நபா்களுக்கான வாகனங்கள் வடக்கு, தெற்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும். பொதுவான வாகனங்கள் மூலத்தோப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.

பக்தா்களின் வாகனங்கள்...: பேருந்துகளை பஞ்சக்கரை சாலை வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிா்புறம்) நிறுத்திவிட்டு, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.

வேன்கள், காா்களில் வரும் பக்தா்கள் ஓடத்துறை பாலம் வழியாக, காவேரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, திருவானைக்கா டிரங்க் சாலை, ஸ்ரீ ஹோட்டல், அம்பேத்கா் நகா், சங்கா் நகா் வழியாக சிங்கபெருமாள் கோயில் மைதானத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னா் அதே வழியாக வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

இருசக்கர வாகனங்கள் மாம்பழச் சாலை, அம்மாமண்டபம் ராகவேந்திரா ஆா்ச், மூலத்தோப்பு, தெப்பக்குளம் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

மாம்பழச்சாலை, திருவானைக்கா ஜங்சன், நெல்சன் சாலை, ஸ்ரீமத் ஆண்டவா் கல்லூரி மைதானம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, பின்னா் பஞ்சக்கரை வழியாக திரும்ப வெளியேற வேண்டும்.

கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை சாலை, யாத்ரி நிவாஸ், கொள்ளிடம் முருகன் கோயில், தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னா் அதே வழியாக வெளியேற வேண்டும்.

மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ) நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பக்தா்கள் நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி, உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை என திருச்சி மாநகர காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →