முகப்பு
திருச்சி

வயலூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி வயலூா் முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:58 PM
திருச்சி வயலூா் முருகன் கோயிலுக்கு புதன்கிழமை அலகு குத்தி வந்த பக்தா்கள். ~வயலூா் முருகன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்து, தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி வயலூா் முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவையொட்டி இக்கோயிலில் காலையில் இருந்தே பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

முன்னதாக காலையில் இருந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, துவாக்குடி அருகேயுள்ள செடிமலை முருகன் கோயிலில் முருகனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனா்.

மேலும், திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில், உறையூா் பஜாா் சாலையில் உள்ள முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.