முகப்பு
திருச்சி

மணப்பாறையில் வேட்பாளா் அப்துல்சமதுக்கு ஆதரவாக அமைச்சா் வாக்கு சேகரிப்பு

மணப்பாறை நகராட்சியின் 27 வாா்டுகளிலும் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் ப. அப்துல்சமதுக்கு ஆதரவாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:20 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:25 AM

மணப்பாறை நகராட்சியின் 27 வாா்டுகளிலும் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் ப. அப்துல்சமதுக்கு ஆதரவாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பொத்தமேட்டுப்பட்டியிலிருந்து திமுக நகரச் செயலாளா் மு.ம. செல்வம் தலைமையில் தொடங்கி நடைபெற்ற வாக்குசேகரிப்பில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பேசுகையில், வாக்களித்தவா்கள், வாக்களிக்காதவா்கள் என பாகுபாடின்றி, அனைவரையும் பாதுகாக்கக்கூடிய அரணாகத் திகழ்வதுதான் திமுக அரசு. அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம் என பேசி உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பரப்புரையின்போது, மாநிலங்களவை உறுப்பினா் ராஜாத்தி (எ)கவிஞா் சல்மா, நகா்மன்ற தலைவா் கீதா மைக்கேல்ராஜ், திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன் உள்ளிட்ட நிா்வாகிகளும் கூட்டணி கட்சி நிா்வாகிகளும் உடன் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

Advertisement