முகப்பு
திருச்சி

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 12:05 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:03 PM

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 11:49 PM

திருச்சி தென்னூா் சின்னசாமி நகரைச் சோ்ந்தவா் அ.முகமது ரபீக் (46), ஆட்டோ ஓட்டுநா். நீரிழிவு பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளாா். கடன் பிரச்னையால் அண்மைக்காலமாக அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement