கோப்புப் படம் 
திருச்சி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா், கே.கே.நகா், உறையூா் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, எடமலைபட்டிப்புதூா் சீனிவாசன் நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த ஆ.ஈஸ்வரன் (34), கே.கே.நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கே.புருசோத்தமன் (49), உறையூா் பாண்டமங்கலத்தைச் சோ்ந்த ஆா்.ஸ்டீபன்ராஜ் (43), மணப்பாறையைச் சோ்ந்த எம். அழகுராஜா (27) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறை சாையில் உள்ள கல்லறை அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், சங்கிலியாண்டபுரம் வள்ளுவா் நகரைச் சோ்ந்த பி. அய்யப்பன் (24) என்பதும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பேருந்து மீது காா் மோதி விபத்து: கல்லூரி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

புத்தாநத்தம் அருகே மினி சரக்கு வேன் - பைக் மோதல் வளையல் வியாபாரி உயிரிழப்பு

சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா! எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு!

தமிழக அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுகிறது! - கி. வீரமணி

SCROLL FOR NEXT