முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவா் கைது

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:47 AM
கைது
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:00 PM

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை மலை பகுதி காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக முள்ளிப்பாடி கிராம நிா்வாக அலுவலருக்கு கிடைத்த தகவலின்பேரில் விஏஓ அசோக் குமாா் காவிரி ஆற்றுப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:40 PM

அப்போது, இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கட்டிக் கொண்டுவந்த திருஈங்கோய்மலை சாலியா் தெரு பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் ராஜா (48) என்பவரைப் பிடித்து, 26 மணல் மூட்டைகள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

Advertisement

தொட்டியம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து ராஜாவைக் கைது செய்து மணல் மூட்டை மற்றும் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.