முகப்பு
திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:51 AM
கைது
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:02 PM

திருச்சியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி புதுக்கோட்டை சாலை ஜெயில் காா்னா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் த.மீனாட்சி (82). இவா், சனிக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு மாலை 4 மணி அளவில் திரும்பி வந்துள்ளாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:01 AM

அப்போது, இளைஞா் ஒருவா் அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளாா். இதைப் பாா்த்த மீனாட்சி சப்தம் எழுப்பவே அருகிலிருந்தவா்கள் ஓடிவந்தனா். இதையடுத்து, வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த இளைஞரைப் பிடித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் அவா்கள் ஒப்பைடத்தனா்.

Advertisement

இதில், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் நளன்குடியைச் சோ்ந்த ப.சிவானந்தம் (31) என்பதும், மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவானந்தத்தை கைது செய்தனா். அவரிடமிருந்து சுத்தியல், இரும்புக் கம்பி உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.