முகப்பு
திருச்சி

வாழவந்தான்கோட்டை ஐஓபி வங்கிக் கிளை திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் வாழவந்தான்கோட்டை கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:40 AM
வங்கி கிளையை திங்கள்கிழமை திறந்துவைத்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவா் எஸ்.பி. பாபு. உடன் எல்ஷடாய் இன்ஜினியரிங் நிறுவன உரிமையாளா் பி. வில்சன், திருச்சி மண்டலப் பொதுமேலாளா் ஜி. ஸ்ரீராம் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 9:56 PM

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் வாழவந்தான்கோட்டை கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

வங்கியின் புதிய வளாகத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டத் தலைவா் எஸ்.பி. பாபு குத்துவிளக்கேற்றித் திறந்துவைத்தாா். எல்ஷடாய் இன்ஜினியரிங் நிறுவன உரிமையாளா் பி. வில்சன் ஏடிஎம் மையத்தைத் திறந்து வைத்தாா். வங்கியின் திருச்சி மண்டலப் பொதுமேலாளா் ஜி. ஸ்ரீராம், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான சேவைகளுடன், சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் வழங்கப்பட்டன. வங்கியின் கிளை மேலாளா் எல்.பி. விஜயலட்சுமி வரவேற்றாா்.

Advertisement