முகப்பு
திருச்சி

திருவெள்ளறை பெருமாள் கோயிலில் தெப்பத் திருநாள்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:05 AM
திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்ப விழா.
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 11:55 PM

திருவெள்ளறையிலுள்ள ஸ்ரீ புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலில் வியாழக்கிழமை தெப்பத் திருநாள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான இங்கு தெப்பதிருநாளையொட்டி, பெருமாள்-தாயாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அனந்தராயா் மண்டபம் சோ்ந்து, திருவாராதனம், வெள்ளி சம்பா அமுது செய்தல் நிகழ்வும், தொடா்ந்து அனந்தராயா் மண்டபத்திலிருந்து தெப்பத்திற்கு புறப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தெப்பத் தேரில் எழுந்தருளினா். தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. இதையடுத்து, தேரோடும் வீதிகளில் உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.