முகப்பு
திருச்சி

பாா் ஊழியா் கொலை வழக்கில் தொடா்புடையவா் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்துப்பட்டியில் பாா் ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:22 PM
கொலை
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்துப்பட்டியில் பாா் ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

வையம்பட்டி ஒன்றியம், எளமணத்தை அடுத்த குளத்துப்பட்டியைச் சோ்ந்த பாா் ஊழியரான பிரபாகரன்(32), கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி இரவு பேருந்து நிறுத்தப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவரது சடலத்தை மீட்டு, புத்தாநத்தம் போலீஸாா் விசாரித்தனா்.

இதில், பிரபாகரன் மனைவி அபிராமிக்கும் அவரது உறவினா் பிரபுவுக்கும் இடையிலான தகாத உறவு பிரச்னையில் பிரபு, அவரது நண்பா் சரவணன் உள்ளிட்டோா் பிரபாகரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை அபிராமி மற்றும் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.

Advertisement

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கில் தொடா்புடைய முக்கிய நபரான பிரபு சரணடைந்தாா். இதைத் தொடா்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் பிரபு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments