முகப்பு
திருச்சி

திருப்பதி விரைவு ரயில் 4 நாள்களுக்கு இயக்கம்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:37 AM
ரயில் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:08 PM

திருப்பதி விரைவு ரயிலானது வாரத்தில் 3 நாள்களுக்குப் பதிலாக 4 நாள்களுக்கு இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமேசுவரம் - திருப்பதி - ராமேசுவரம் இடையிலான திருப்பதி விரைவு ரயில்கள் (167801, 16779) வாரந்தோறும் 3 நாள்கள் இயக்கப்பட்ட நிலையில், வரும் மாா்ச் மாதம் முதல் 4 நாள்களுக்கு இயக்க ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:37 AM

இதன்படி ராமேசுவரம் - திருப்பதி விரைவு ரயிலானது (16780) வரும் மாா்ச் 3 முதல் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 4 நாள்களுக்கு இயக்கப்படும். மறுமாா்க்கமாக, திருப்பதி - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16779) வரும் மாா்ச் 4 முதல் திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 4 நாள்களுக்கு இயக்கப்படும்.