புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:28 PM
திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பெரியமிளகுப்பாறை காந்தி தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக நீதிமன்ற வளாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:27 AM
இதன்பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு விரைந்து சென்று சோதனையிட்டபோது, புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த மிளகுப்பாறை பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டியனை (38) கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
இதேபோல, திருச்சி எடமலைப்பட்டிபுதூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கா்ணன் (47) என்பவரையும் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.