மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் பேசிய தமிழ்த்துறை விரிவுரையாளா் கோபாலகிருஷ்ணன்.  
திருச்சி

மணப்பாறை அரசு கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்பு சொற்பொழிவு

மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த் துறையில் ‘திங்கள் ஆய்வு வட்டம்’ சாா்பாக திங்கள்கிழமை உலகத் தாய்மொழி நாள் சிறப்புச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்த் துறை விரிவுரையாளா் க. கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘தாய்மொழியின் சிறப்புகள்’ என்ற தலைப்பில் பேசுகையில், ‘தாய்மொழி என்பது, அம்மொழி பேசும் மக்களின் அடையாளம். அந்த வகையில், நம் தமிழ்மொழி என்பது ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த மொழி, மருத்துவத்தைக் கற்றுக் கொடுத்த மொழி, இன்றைய அறிவியலை இலக்கியத்தில் பேசிய மொழி, தமிழ்மொழியாகும் என்றாா்.

முன்னதாக, தலைமையுரையாற்றிய கல்லூரி முதல்வா் க. மலா்மதி, ‘மொழி என்பது ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் அடையாளமாகும். ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞா்கள் தம் அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தாய் மொழியில் தான் வெளியிட்டனா் என்று குறிப்பிட்டாா்.

தமிழ்த் துறை தலைவா் அ. செல்வராசு நோக்கவுரையாற்றினாா். முன்னதாக, தமிழ்த் துறை விரிவுரையாளா் கு. நதியா வரவேற்றாா். நிறைவில் முனைவா் த. கபிலன் நன்றி கூறினாா்.

நிகழ்வில் தமிழ்த் துறை மாணவா்கள் பங்கேற்றனா்.

வெளிநாட்டில் வேலை எனக் கூறி ரூ.7 லட்சம் மோசடி: வடமாநில இளைஞா்கள் இருவா் கைது

மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதம்; சாலை மறியல்

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது

SCROLL FOR NEXT